டெங்கு காய்ச்சலுக்கு மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைக்கும் மருத்துவம்:
டெங்கு மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள ஹோமியோபதி மருத்துவம் உதவுகிறது.
ஹோமியோபதி முறை எப்படி உங்கள் உடல்நலம் காக்கும்?
வைரஸ் கிருமிகளால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் ஆகியவற்றில் இருந்து ஹோமியோபதி மருந்துகள் உங்களைக் காக்கும். உங்கள் தடுப்பு சக்தியை மேம்படுத்த உதவும்
Eupatorium perfoliatum :
இனிப்பு உருண்டைகளாக வழங்கப்படும் இந்த மருந்தை பின்வருமாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
◆ வயது வந்தோர்: 30 அளவுள்ள 4 உருண்டைகள்
◆12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: 30 அளவுள்ள 2 உருண்டைகள்
இதனை நன்கு சுவைத்து சாப்பிடலாம்.
வாரத்துக்கு ஒருமுறை என்று பத்து வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
◆ ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகளற்றவை. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எடுத்துக்கொள்ளும் அளவிற்குப் பாதுகாப்பானவை.
:dart:இம்மருந்து பொதுவாக மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாற்று அல்ல.
:dart:கொசு உற்பத்தி, பெருக்கத்தைத் தடுப்பது அவசியம்.
செய்ய வேண்டியவை:
கொசுவலை,
கொசுவர்த்திகள், கொசு மட்டைகள், கொசுத் தடுப்பான்கள் (repellants) பயன்படுத்தவும்
நீரை வடிகட்டவோ, சுத்திகரிக்கவோ முடியாத இடங்களில் TEMEPHOS எனும் புழுக்கொல்லி துகள்களைத் தூவிவிடவும்
கொசுத்தடுப்பு வளிமக்கரைசல்கள்களை (Aerosol) பகல், இரவு வேளைகளில் பயன்படுத்திக் கொசுக்கடியில் இருந்து காத்துக்கொள்ளவும்
தண்ணீரை சேமிக்கும் இடங்கள், சிறு பாத்திரங்களில் இருந்து தண்ணீரை வாரத்துக்கு ஒரு முறையாவது வெளியேற்றவும்
தண்ணீர்த் தொட்டிகளை அடிக்கடி நன்றாகத் தேய்த்து, கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்தவும். தண்ணீரைக் குளிர வைக்கும் அட்டைகளை அவ்வப்போது மாற்றவும். இவை கொசு முட்டையிடும் இடங்களாக இருக்கக் கூடும்.
வீட்டுக்கூரைகள், வளாகங்கள், நிழற்குடைகள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்யவும்
செய்யக்கூடாதவை:
வீட்டை சுற்றி நீர் தேங்க விடாதீர்கள்
கைகள், கால்கள் மூடிய உடைகளை அணிய வேண்டும்.
தண்ணீர் சேமிக்கப்படும் பாத்திரங்கள், இடங்களைத் திறந்து போடாமல் மூடி வைக்கவும்
டெங்கு/சிக்குன்குனியா உங்களுக்கு இருக்கிறது எனத்தெரிந்தால் அஞ்சி நடுங்காதீர்கள். முறையான சிகிச்சை நிச்சயம் உயிர் காக்கும்.
கீழ்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்:
காய்ச்சல் ,மூட்டுவலி ,உடல்வலி ,தலைவலி ,அரிப்பு, கண்வலி ,திடீர் ரத்தக்கசிவு .
டெங்கு, சிக்குன்குனியா தடுப்பில் எப்படி ஈடுபட வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவர்கள் அறிந்து கொள்ளக் காண்க: www.cchrindia.nic.in
பொதுநலன் கருதி வெளியிடுவோர்:
மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் கழகம்
மத்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகம், இந்திய அரசு.